சினிமா

காமெடி நடிகர் லோகேஷின் தற்போதைய நிலையை பற்றி வீடியோ வெளியிட்ட பிரபலம்! என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்!

Summary:

Lokesh

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி ஷோவில் நடித்து பிரபலமானவர் நடிகர் லோகேஷ். இவர், குட்டி கோபியுடன் சேர்ந்து செய்யும் காமெடிகள் ரசிகர்கள் மிகவும் கவரப்பட்டது.

அதனை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்ப்பட்டு இடது கை மற்றும் இடது கால் செயலிழந்தது. அதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் சிகிச்சைக்கு 7 லட்சம் வரை பண உதவி தேவைப்பட்டது.

இதனால் அவரது நண்பர்கள் இணைந்து சமூக வலைத்தளத்தில் உதவிகளை கேட்டு ஷோர் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவரின் நண்பர் குட்டி கோபி லோகேஷின் தற்போதைய நிலையை பற்றி வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் லோகேஷின் மருத்துவத்திற்கு நாங்கள் கேட்ட தொகை வந்துவிட்டது. லோகேஷுக்கும் நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடிந்துவிட்டது. நாளை அவரை ஜெனரல் வார்டிற்கு மாற்ற உள்ளனர். இனி லோகேஷின் அந்த புகைப்படத்தை யாரும் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.


Advertisement