லிப்-லாக் முத்தத்திற்கு எனக்கு ஒரே ஒரு டேக்... ஹீரோ தான் 19 டேக் எடுத்தார்...!

lip-lock-sandhini-metro-hero


lip-lock-sandhini-metro-hero

வளர்ந்து வரும் இயக்குனரான தரணீதரன் ஏற்கனவே பர்மா மற்றும் ஜாக்சன் துறை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் படம் "வஞ்சகர் உலகம்". இந்த படத்தில் ஹீரோயினாக சாந்தினி நடித்து வருகிறார். இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லராக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக "மெட்ரோ" படத்தில் நடித்த சிரிஷ் நடிக்கிறார். 

சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகை சாந்தினி, இந்த படத்தில் நாங்கள் நடிப்பது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. மேலும் இந்த படத்தின் அணைத்து காட்சிகளும் அருமையாக அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளார். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளை ஒரே டேக்கில் நானும் ஹீரோவும் செய்து முடித்துவிட்டோம். ஆனால், ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் ஹீரோ நடித்து முடிக்க 19 டேக் ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். 

அது தான் நாங்கள் எடுத்த அதிக டேக் எனவும் கூறலாம். அந்த காட்சி என்னவென்றால் படத்தில் வரும் ஒரு முத்தாக காட்சி தான். அந்த காட்சியில் கதாநாயகிக்கு, கதாநாயகன் உதட்டில் முத்தம் தருவது போல காட்சி அமைக்கபட்டிருந்ததாம். அந்த காட்சியில் சாந்தினி ஒழுங்காக ஒத்துழைக்க நாயகன் சிரிஷ் மட்டும் தடுமாறியுள்ளார்.  சாந்தினி அவரை கிண்டல் செய்துள்ளதாகவும் கூகின்றனர்.