ட்ரெய்லரில் விஜய் பேசிய ஆபாச வார்த்தை.. தணிக்கை குழு எடுத்த அதிரடி முடிவு.?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில், அனிரூத் இசையமைப்பில், ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லியோ படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ தரச்சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
லியோ திரைப்படத்தில் இளைய தளபதி விஜய், திரிஷா, சஞ்சய், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இப்படத்தில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், ஒரு சில ரசிகர்கள் முகம் சுழிக்கும் விதமாக ட்ரெய்லர் அமைந்தது. இதில் இளைய தளபதி விஜய் பெண்களை குறிக்கும் ஆபாசமான வார்த்தைகளை பேசி இருப்பார்
இது இணையத்தில் சர்ச்சையாகி விஜய் எப்படி இந்த மாதிரி வார்த்தை பேசலாம் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தணிக்கை குழு ட்ரெய்லரில் இருக்கும் ஆபாசமான வார்த்தையை மியூட் செய்துள்ளது. இதன் பின் லியோ டிரெய்லர் தற்போது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.