'சபாஷ் மீனா' படத்தில் அவரைவிட ஒரு ரூபாய் அதிகமாக சம்பளம்......"! என்று கண்டிஷன் போட்ட சந்திரபாபு!legendry-comedy-actor-chadra-babu-demands-more-salary-t

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் அது செவாலியே சிவாஜி கணேசன் தான். பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இவர் நடிப்பிற்கு இலக்கணம் என்றால் அது சிவாஜி தான் என சொல்லுமளவிற்கு தத்ரூபமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருபவர். அவருக்கு இணையான ஒரு  நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்திரபாபு தான்.

1947 ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்திரபாபு. இவர் நகைச்சுவை கலந்த நடிப்போடு தன்னுடைய அட்டகாசமான நடன அசைவுகளால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த சபாஷ் மீனா என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படத்தினைப் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.

sivaji

அந்த செய்தியின்படி சபாஷ் மீனா திரைப்படத்தின் இயக்குனர்களான பி ஆர் பந்துலு மற்றும் நீலகண்டன் ஆகியோர் முதலில் சிவாஜி கணேசனிடம் இந்த கதையை சொல்லி இருக்கின்றனர். அவர் கதையை கேட்டுவிட்டு கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவை நடிகரின் கதாபாத்திரத்தையும் அமைத்து அதில் சந்திரபாபு நடிக்க வைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் சந்திரபாபு சந்தித்து கதை சொன்ன போது கதையைக் கேட்டு நடிக்க சம்மதம் சொன்ன அவர் சிவாஜி கணேசன் வாங்கும் சம்பளத்தை விட ஒரு ரூபாய் அதிகம் கொடுத்தால் தான் நான் இந்த திரைப்படத்தில் நடிப்பேன் என கண்டிஷன் போட்டுள்ளார். இந்த கண்டிஷனை கேட்டு அதிர்ந்து போன இயக்குனர்கள் சிவாஜி கணேசனிடம் இதைப் பற்றி கூறியிருக்கின்றனர்.

sivajiஅதற்கு இயக்குனர்களிடம் பதிலளித்துள்ள சிவாஜி கணேசன் "அவர் சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க, இந்த கதாபாத்திரத்தில் சந்திரபாபு நடித்தால்தான் சரியாக இருக்கும்" என கூறி இருக்கிறார். மேலும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விடுங்கள் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சபாஷ் மீனா படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சந்திரபாபு ஆகியோர் இணைந்து நடித்து அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.