பாடகி லதா மங்கேஷ்கர் வசிக்கும் கட்டிடத்திற்கு சீல்! இதுதான் காரணமா? அவரே வெளியிட்ட தகவல்!
நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சாமானிய மக்கள் முதல் திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டனர். மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட்டின் பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் வசிக்கும் கட்டிடத்துக்கு சமீபத்தில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனை தொடர்ந்து லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில் பாடகி லதா மங்கேஷ்கர் இதுகுறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் வசிக்கும் பிரபுகன்ச் பகுதியில் முதியோர்கள் பலர் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் கட்டிடத்துக்கு சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் எங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருப்பதாக செய்திகள் பரவிவருகிறது. அது உண்மையில்லை. அதனை தயவுசெய்து நம்பவேண்டாம்.கடவுளின் அருளால், உங்கள் அனைவரது வாழ்த்தாலும், எங்கள் குடும்பம் பாதுகாப்பாக உள்ளது என கூறியுள்ளார்.