"நூறு கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜிகிர்தண்டா 2" வெளியான முதல் பாடல் மற்றும் அப்டேட்கள்.!

2014ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "ஜிகர்தண்டா". இந்தப் படத்திற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது. ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இப்படம்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் முதல் பாடலான "மாமதுர" பாடலும் வெளியாகி யூட்யுபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் தீப் பாடியுள்ளனர்.
இப்பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற எஸ்.ஜே.சூர்யா , " இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி இயக்குனருக்கு 9 ஆண்டுகள் தேவைப்பட்டதாம். மேலும் இப்படம் 100கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது" என்று கூறியுள்ளார்.