மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு வராத கமல்.. கமலுக்கு டுப் வைத்து எடுக்கப்படும் படக்காட்சிகள்.! என்ன காரணம்.?
1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன், மனீஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "இந்தியன்". இந்தப் படத்தில் கமலஹாசன் தந்தை, மகன் என்று இரு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.
ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு வயதான சுதந்திர போராட்ட வீரராக "சேனாபதி" என்ற கதாப்பாத்திரத்தில் மிரட்டலாக நடித்து அனைவரையும் மிரட்டிய கமல், தற்போது மீண்டும் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது ஷங்கர் "இந்தியன் 2" படத்தை ஆரம்பித்து இயக்கி வருகிறார்.
இதில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், நெடுமுடி வேணு, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்தப் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கி விஜயவாடாவில் 8000 துணை நடிகர்களை வைத்து ஒரு பிரம்மாண்டமான காட்சியைப் படமாக்கி வருகிறார் ஷங்கர். அதில் கமலின் காட்சிகளை அவர் இல்லாமல் டூப் வைத்து படமாக்கி வருகிறார் என்றும், விரைவில் கமல் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்றும் தெரியவந்துள்ளது.