
Latest photo for oviya
களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை ஓவியா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஓவியா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பிறகு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப முதல் இவரது பேச்சு, நடவடிக்கை , டான்ஸ் போன்றவற்றால் ரசிகர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா ஆர்மி அமைத்து ஓவியாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான 90ml திரைப்படத்திற்கு பிறகு இடைவேளையில் இருந்தார் நடிகை ஓவியா.
இந்நிலையில் தற்போது திருப்பூரில் நகை கடை திறப்பு விழாவில் சென்றிருந்தபோது தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். மேலும் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Thanku 🙏🥺😘 pic.twitter.com/r9t1RFtFWV
— Oviyaa (@OviyaaSweetz) September 21, 2019
Advertisement
Advertisement