பாரதிராஜாவை அவமதித்தாரா இளையராஜா.! நீண்ட காலம் கழித்து வெளியான தகவல்.!
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 1977ம் ஆண்டு இவர் இயக்குனராக அறிமுகமான படம் '16வயதினிலே'. இதில் ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், புதிய வார்ப்புகள், முதல் மரியாதை, கருத்தம்மா என தொடர்ந்து பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தன் படம் குறித்து ஒரு முடிவை எடுத்துவிட்டால், யார் என்ன கருத்து சொன்னாலும் தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார்.
1985ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி, ராதா, வடிவுக்கரசி ஆகியோரை வைத்து பாரதிராஜா இயக்கிய படம் "முதல் மரியாதை". இப்படத்தை இயக்குனர் பஞ்சு அருணாச்சலத்துக்குப் போட்டுக் காட்டியபோது அவர் எனக்கு இந்தப்படம் பிடிக்கவில்லை என்று கூறினாராம்.
இதேபோல் இப்படத்தின் இசை சேர்ப்புக்காக இளையராஜாவுக்கு போட்டு காட்டிய போது, அவரும் தனக்கு இப்படம் பிடிக்கவில்லை, இந்தப் படம் ஓடாது என்று கூறினாராம். இது பாரதிராஜாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், தன் கதை மீதிருந்த நம்பிக்கையில் பாரதிராஜா படத்தை வெளியிட்டு, மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.