90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
அஜித்தை கட்டுபடுத்தி வைத்திருக்கும் ஷாலினி.. வெளியான பரபரப்பு செய்தி.!

80களில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் வெற்றிகரமான குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் ஷாலினி. அடிப்படையில் மலையாள கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஷாலினி, தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட "அம்லூ" என்ற தொலைக்கட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து சினிமாவை விட்டு சில காலம் விலகியிருந்த ஷாலினி, 1997ம் ஆண்டு பாசில் இயக்கிய "காதலுக்கு மரியாதை" படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். தொடர்ந்து 1999ம் ஆண்டு "அமர்க்களம்" படத்தில் நடித்தபோது இவருக்கும், அஜித்துக்கும் இடையே காதல் மலர்ந்தது.
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அஜித் - ஷாலினி குறித்து பேசியுள்ளார். "பல படங்களில் ஒப்பந்தமாகியிருந்த போது அஜித் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
அப்போது தயாரிப்பாளர்கள் அட்வான்ஸை திருப்பிக் கேட்டனர். இதனால் கடன் பிரச்சனைகளில் சிக்கிய அஜித்திடம், 'நமக்கு தெரிந்த தொழிலில் தான் கவனம் செலுத்த வேண்டும்' என்று ஷாலினி கூறினாராம். அதன் பிறகு அஜித் பைக்கை தொடவே இல்லை. ஷாலினி தான் அஜித்துக்கு பக்கபலமாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.