" என் கிணத்தை காணோம், வடிவேலு பட பாணியில் காணாமல் போன லால் சலாம் பட காட்சிகள்" பரிதவிக்கும் பட குழு..Lal salam movie scenes missing

ஐஸ்வர்யா நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார். 2012ம் ஆண்டு தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து 2015ம் ஆண்டு வை ராஜா வை என்ற திரைப்படத்தையும்  இயக்கியுள்ளார். மேலும் பின்னணி பாடகியாகவும் உள்ளார்.

Lalsalam

இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது "லால் ஸலாம்" என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

2024 பொங்கல் அன்று வெளியாகவுள்ள இப்படத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் மும்பை, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Lalsalam

இந்நிலையில் மும்பையில் படமாக்கப்பட்ட ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் தற்போது காணாமல் போனதால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். இதை மீட்டெடுக்க அமெரிக்காவில் இருந்து நவீன மென்பொருளை கொண்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.