தமிழகம் சினிமா

6 வருடத்திற்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த இளைஞரின் தற்போதைய நிலை.!

Summary:

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு பலரும் வியப்பில் உள்ளனர்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கலவையான விமர்சனங்களை பெற்று பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். மேலும்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். ஆனாலும் பலரும் இந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்து வந்தனர்.

இந்த நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கடும் வியப்பில் உள்ளனர்.

அதாவது கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிரை காப்பாற்ற சிகிச்சை பெற முடியாமல் இருந்த இளைஞரை அவரின் தாய் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இளைஞரின் தாயார் தனது மகனின் உயிரை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கேட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த நபரின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் இவரை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். எங்களிடம் வந்த இந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்து, இலவச மருந்து பொருட்களுடன் வீட்டிற்கு அனுப்பி சிகிச்சை பெற்றார். பின்னர் அதிசயம் நடந்தது !! பல வருடங்கள் கழித்து இன்று சிறுவனை மீண்டும் சந்தித்தோம். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு உதவிகள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இளைஞரின் தற்போதைய நிலையை கண்டு ராமகிருஷ்ணனும் இன்ப அதிர்ச்சியில் உள்ளார். 


Advertisement