சினிமா

சினிமாவில் தலைகாட்டி 4 வருஷம் ஆச்சு..! மீண்டும் வேற லெவலில் திரும்பி வரும் லட்சுமி மேனன்.!

Summary:

Lakshmi menon come back after 4 years

கும்கி, சுந்தரபாண்டியன் என சினிமாவில் அறிமுகமான உடனே அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை லட்சுமி மேனன். அடுத்தடுத்த வெளியான படங்கள் சற்று தோல்வியடைந்த நிலையில் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்க சென்றார் லட்சுமி மேனன்.

கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்க படத்தில் நடித்த இவர், தனக்கு படிப்புதான் முக்கியம், தான் மேற்படிப்பு படிக்க போவதாக சினிமாவில் இருந்து வெளியேறினார். இதனிடையே உடல் எடை சற்று கூடி, இனி சினிமா பக்கமே வரமுடியாது என்ற அளவிற்கு  மாறினார்.

இந்நிலையில், உடல் எடையை குறைத்து மீண்டும் வேற லெவலில் திரும்பி வந்திருக்கிறார் லட்சுமி மேனன். கடந்த 4 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர், தற்போது நடிகர் விக்ரம் பிரபுவுடன் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு வெளியான ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவை திற படத்திற்கு பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காத ஸ்ரீ திவ்யா இந்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படி இரண்டு முக்கிய நடிகைகள் ரீஎன்ட்ரி கொடுக்கப்போகும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement