நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
கும்கி பட லட்சுமி மேனனின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா!! புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!!

மலையாளம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். அதேபோல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் இவரது முதல் திரைப்படம் என்றே கூறலாம்.
இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் பெற்றதால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் நடிகை லட்சுமிமேனன். அதனைத் தொடர்ந்து குட்டிபுலி, பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ரெக்கை என பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகை லட்சுமி மேனன்.
அதன் பின்னர் தல அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற வேதாளம் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்து, நடிப்பில் அசத்தியிருந்தார் நடிகை லட்சுமி மேனன். அதை தொடர்ந்து உடல் எடை சற்று கூடிய நடிகை லட்சுமி மேனன் புதுமுக நடிகைகளின் வரவால் பட வாய்ப்பு இன்றி இருந்தார்.
இந்நிலையில் தற்போது லட்சுமிமேனன் தனது உடல் எடையை பெருமளவில் குறைத்துள்ளார். மேலும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மேடைகளில் பரதம் ஆடி வருகிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் லட்சுமி மேனனா இது என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.