13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
வெளியான விஜய் சேதுபதியின் குட்டி ஸ்டோரி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி! செம சர்பிரைசில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் வெவ்வேறு இயக்குனர்கள், தனித்தனியாக சுவாரசியமான, வித்தியாசமான கதைகளை இயக்கி உருவாகிவரும் ஆந்தாலஜி திரைப்படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது முன்னணி இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட்பிரபு, விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து நான்கு வித்தியாசமான கதைகளில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
இதன் முதல் கதையில் கௌதம் மேனன் மற்றும் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கின்றனர். மேலும் இரண்டாவது கதையில் விஜய் இயக்க வருண் மற்றும் சாக்ஷி அகர்வால் மற்றும் அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் கதையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்த அமிதாஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
பின்னர் நலன் குமாரசாமி இயக்கும் கதையில் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு ஜோடியாக அருவி அதிதி பாலன் நடிக்கின்றனர்.வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த நிலையில் குட்டி ஸ்டோரி படத்தின் விஜய் சேதுபதி நடித்துள்ள ஸ்னீக் பீக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.