25 ஆண்டுகளாகியும் மாறாத குஷ்புவின் இளமை! இளைஞர்களை சுண்டி இழுக்கும் புகைப்படம்!.kushbu shared new photo on her twitter


கொண்டையில் தாழம்பூ... கூடையில் வாழைப் பூ.... நெஞ்சிலே என்ன பூ... குஷ்பூ... என் குஷ்பூ.. என இளைஞர்களை வெகுநாட்களாக பாட வைத்த பெருமைக்குரியவர் நடிகை குஷ்பு.

குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் துவக்கிய அவர், இன்று நல்ல குடும்பத்தலைவியாகவும், நடிகையாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும், வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.

நடிகை குஷ்பு, தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில், வித்தியாசமாக ஆடை அணிந்து வித்தியாசமான காரணத்திற்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளேன் என கூறியிருக்கிறார்.  

அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது புகைப்படத்திற்கு குஷ்புவின் ரசிகர்கள் அதிகப்படியாக விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் குஷ்பு அணிந்திருந்த ஆடை இளம் வயது பெண்கள் அணியும் ஆடை போல் இருந்தது.