ரசிகர்களின் வேண்டுகோளால் மீண்டும் சினிமாவில் குதிக்கும் நடிகை குஷ்பு! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ரசிகர்களின் வேண்டுகோளால் மீண்டும் சினிமாவில் குதிக்கும் நடிகை குஷ்பு! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!


Kushbu again come to cinema


நான் நடிக்கலாமா? வேண்டாமா? என்று நடிகை குஷ்பு தனது நண்பர்களிடம் டுவிட்டர் மூலமாக அறிவுரை கேட்ட குஷ்புவை மீண்டும் சினிமாவில் நடிக்குமாறு ரசிகர்கள் கேட்டதால் வேண்டுகோளை ஏற்றுள்ளார்.

தர்மத்தின் தலைவன் படம் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. சின்னத்தம்பி, அண்ணாமலை, பாண்டியன், சிங்காரவேலன் என வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி ஆனார். 80ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் கனவுக்கனியாக விளங்கியவர் குஷ்பு.   

நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட இவர், தம் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை படிப்படியாக குறைத்தார். குழந்தைகள் பிறந்த பிறகு முழுமையாக சினிமாவிலிருந்து விலகினார். அடுத்து அரசியலிலும் களமிறங்கி தற்போது காங்கிரசின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று டுவிட்டரில் பகிர்ந்த ஒரு பதிவில் மீண்டும் படங்களில் நடிக்கலாமா, வேண்டாமா என்று ரசிகர்களிடம் கேட்டார். 

குஷ்புவின் டுவிட்டை பார்த்தவர்கள் குஷ்பு கண்டிப்பாக மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்றனர். தனக்கு இப்படி அமோக ஆதரவு இருப்பதை பார்த்த குஷ்பு மீண்டும் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார்.