அரசியலுக்கு வருவாரா நடிகர் ரஜினி? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகை குஷ்பூ என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

அரசியலுக்கு வருவாரா நடிகர் ரஜினி? பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகை குஷ்பூ என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!


Kushboo tweet about rajini to politics

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக தெரிவித்திருந்த நிலையில், அவர் எப்போது புதிய கட்சி தொடங்குவார்  என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் ரஜினி வெளியிட்டது போன்ற அறிக்கை ஒன்று வெளியாகி வைரலானது.

அதில், தனது உடல்நிலை சரியில்லை மருத்துவர்கள் ஆலோசனைப்படி அரசியலுக்கு வரும் முடிவை கைவிடுவதாக தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தமடைந்தனர். இதனைதொடர்ந்து நடிகர் ரஜினி அது, எனது அறிக்கை அல்ல. ஆனால் அதில் எனது உடல்நிலை குறித்து வந்த தகவல்கள் உண்மை, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் தெரிவிப்பேன்  என தெரிவித்திருந்தார்.

rajini

இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதங்கள் எழுந்து வந்தநிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், அன்புக்குரிய ரஜினிகாந்த் அவர்களே, உங்களது உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை. நீங்கள் எங்களது விலையில்லா ரத்தினம். எங்களது புதையல். உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு எது நல்லதோ அதை செய்யுங்கள். உங்கள் மீது உள்ள எங்களது அன்பு எப்பொழுதும் மாறாது. எங்களது வாழ்நாள் முழுவதும் உங்களை தொடர்ந்து வணங்குவோம் என பதிவிட்டுள்ளார்.