சினிமா

விஜய் சேதுபதிக்கு விருந்து வைத்து அசத்திய பிரபல நடிகை! யார்னு பார்த்தீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்!

Summary:

நடிகர் விஜய் சேதுபதி குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக செம பிசியாக  இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக இருந்த விஜய் சேதுபதி விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து அவரது கைவசம் கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அண்ணபெல்லே சுப்பிரமணியம், 19 (1) (a) என ஏராளமான படங்கள் உள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த நிலையில் அவர் நடிகை குஷ்புவை சந்தித்து பேசியுள்ளார். அத்தகைய புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பூ , விஜய்சேதுபதி மதிய உணவு சாப்பிட வந்திருந்தார். நாங்க நிறைய பேசினோம். சாதாரண நாளை ஸ்பெஷலாக மாற்றிய விஜய்சேதுபதிக்கு மிக்க  நன்றி என பதிவிட்டுள்ளார்


Advertisement