இனி வேற லெவலில் இருக்கும்.. மீண்டும் அம்சமாக சீரியலில் களமிறங்கும் நடிகை குஷ்பு! அதுவும் எந்த பிரபல சீரியலில் பார்த்தீர்களா!!

இனி வேற லெவலில் இருக்கும்.. மீண்டும் அம்சமாக சீரியலில் களமிறங்கும் நடிகை குஷ்பு! அதுவும் எந்த பிரபல சீரியலில் பார்த்தீர்களா!!


kushboo join in gokulathil seethai serial

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. அதனைத் தொடர்ந்து அவர் 80ஸ் காலகட்டங்களில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

நடிகை குஷ்பு வெள்ளித்திரை படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் களமிறங்கி அசத்தலாக நடித்துள்ளார். அவர் இதற்கு முன்பு குங்குமம் கல்கி போன்ற தொடர்களில் நடித்து இருந்தார் மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர் தொடரில் நடித்து 
மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார். அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு தற்போது மீண்டும் சீரியலில் களமிறங்கியுள்ளார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகிவரும் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் மங்களம் மாமி என்ற கௌரவ குணச்சித்திர வேடத்தில் குஷ்பூ இணைந்துள்ளார். இதனால்  கோகுலத்தில் சீதை தொடர் மேலும் விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.