கலக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்..... தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா....! வெளிவந்த தகவல்....

கலக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்..... தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா....! வெளிவந்த தகவல்....


krk-movie-tamilnadu-vasool

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி மற்றும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகளான நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். 

இப்படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி 3 நாட்களில்ளே நல்ல ஹிட்டடிக்க படக்குழு தேவி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, அங்கேயே கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். இந்நிலையில் தற்போது வசூலில் கலக்கிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 23 கோடி கலெக்சன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.