நடிகர் தனுஷ்க்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி மகள் நடிகை! வெளியான தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!!‹

நடிகர் தனுஷ்க்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி மகள் நடிகை! வெளியான தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!!‹


kreethi-shetty-going-to-act-as-dhanush-pair

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக உப்பென்னா பட நடிகை க்ரீத்தி ஷெட்டி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக வலம் வரும்  தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்து  மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் போன்றோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி 2 படமும் தயாராகி வெளியானது. அப்படமும் மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானது. இந்த நிலையில் தனுஷ் மீண்டும் மூன்றாவது முறையாக பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Kreethi shetty

இந்த நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை க்ரீத்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. க்ரீத்தி ஷெட்டி தெலுங்கில் வெளிவந்த உப்பென்னா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் 17 வயது நிறைந்த நடிகை க்ரீத்தி ஷெட்டிக்கு அப்பாவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தமிழில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.