சினிமா

பங்கமாய் வச்சு செய்த யோகிபாபு.! மின்னல்வேகத்தில் பகிரப்படும் கோமாளி பட மரணமாஸ் வீடியோ!! இதோ..

Summary:

komali sneak peek video viral

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து  பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி தற்போது தனது 24 வது படமாக பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகும் கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலும் நல்ல முறையில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் 90 களில் நடைபெற்ற பல நினைவுகளை கூறும் வகையில் பல காட்சிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் யோகி பாபு மேலும் கூகுள் மேப் ஐ கலாய்க்கும் விதமாக அமைக்கப்பட்ட காட்சியின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . மேலும் இதனை லச்சக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்துள்ளனர். 


Advertisement