ரஜினியை கலாய்த்தது இதனால்தான்.! கொந்தளித்த ரஜினி ரசிகர்களுக்கு விளக்கமளித்த கோமாளி இயக்குனர்!!

ரஜினியை கலாய்த்தது இதனால்தான்.! கொந்தளித்த ரஜினி ரசிகர்களுக்கு விளக்கமளித்த கோமாளி இயக்குனர்!!


komali director explain the reason for teasing rajini

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து  பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி தற்போது தனது 24 வது படமாக பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகும் கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. 

அதில் ரஜினி அரசியலுக்கு வருவதை கிண்டல் செய்யுமாறு காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.அதனை கண்டு கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் கோமாளி படத்திற்கு எதிராக குரல்கொடுக்க துவங்கினர்.

இந்நிலையில் இந்தக் காட்சி வைக்கப்பட்டது குறித்து கோமாளி படவிழாவில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விளக்கமளித்துள்ளார் . அதில் அவர் நான் பயங்கர ரஜினி ரசிகன். லிங்கா படம் வெளியான போது நான் அவரது கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்துள்ளேன். அவர் சீக்கிரம் அரசியலுக்கு வரவேண்டும் என்பதால்தான் இந்தக் காட்சியை படத்தில் வைத்தேன். 90’ஸ் கிட்ஸ் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.