சினிமா

ரஜினி, அஜீத்துடன் நயன்தாரா போட்டியா! வெளியானது 'கொலையுதிர் காலத்தின்' செகண்ட் லுக்

Summary:

kollaiyuthir kaalam second look

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் செகண்ட் லுக் நேற்று வெளியானது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். லண்டனில் தொடங்கிய இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் முடித்துவிட்டது.

இந்தப் படம், பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ளது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும்போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவனிடம் இருந்து அந்த எழுத்தாளர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் திரைக்கதை. 

படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன நிலையில், இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மேலும் இந்த படம் ஜனவரி 2019-ல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் தினத்தன்று ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நயன்தாராவின் கொலையுதிர் காலம் எந்தவித தேதியும் குறிப்பிடப்படாமல் வெறுமனே ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படமும் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். அதேநேரத்தில் ரஜினி மற்றும் அஜீத்துடன் நயன்தாரா போட்டி போட முடியுமா என்பதும் கேள்விக்குறியே! 


Advertisement