சினிமா

இணையத்தை கலக்கும் பேட்ட ட்ரெய்லர் வெர்ஷன் 2 வீடியோ: என்ன ஒரு நடிப்பு!

Summary:

Kids petta version 2 trailer

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’ திரைப்படம் இன்று ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. 

ரஜினியின் இளமைத் தோற்றத்தில்  வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பாட்ஷா, படையப்பா படங்களுக்கு அடுத்து ரஜினி நடித்துள்ள மாஸான படம் இது தான் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை ரஜினி ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் சிறுவர்கள் ஒரு குழுவாகவே இணைந்து பேட்ட படத்தின் வெர்ஷன் 2 ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இவர்களின் நடிப்பு மிகவும் பிரமிப்பாக உள்ளது. இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.


Advertisement