பாலிவுட்டின் சூப்பர் ஹிட் பட 2ஆம் பாகத்தில் நடிக்கிறாரா கேஜிஎப் ராக்கிபாய்.! எந்த படம் தெரியுமா? வெளிவந்த தகவல்!!

பாலிவுட்டின் சூப்பர் ஹிட் பட 2ஆம் பாகத்தில் நடிக்கிறாரா கேஜிஎப் ராக்கிபாய்.! எந்த படம் தெரியுமா? வெளிவந்த தகவல்!!



kgf-yash-going-to-act-on-pramashtra-part-2

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான திரைப்படம் பிரம்மாஸ்திரா. இந்த படத்தில் ஹீரோயினாக ஆலியா பட் நடித்திருந்தார். மேலும் அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

பிரம்மாஸ்திரா திரைப்படம் கடந்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் சாதனையும் படைத்தது. 
‌இந்த நிலையில் பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

bollywood

பிரம்மாஸ்திரா படத்தின் 2ஆம் பாகத்தில் கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமாகி இலட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் கன்னட நடிகர் யாஷ்ஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் அதில் நடிப்பதற்கு அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.