சினிமா

முதலமைச்சரை சோகத்தில் ஆழ்த்திய பிரபல நடிகரின் மரணம்..! சினிமாவில் கலக்கிவந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.!

Summary:

Kerala actor ravi vallathev passed away

கேரளாவை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரவி வல்லத்தோல் மறைவிற்கு கேரளா முதலமைச்சர் உட்பட பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

1987 ல் வெளியான சுவாதி திருநாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி வல்லத்தோல். அதன்பிறகு காட்பாதர், சங்கம், நாலு பெண்கள், இடுக்கி கோல்ட், சதுரங்கம், ஹிட்லர் பிரதர்ஸ் என பல பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

அமெரிக்கன் ட்ரீம்ஸ் என்ற சீரியலில் நடித்த நிலையில், சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதையும் பெற்றுள்ளார் ரவி வல்லத்தோல். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.

67 வயதாகும் இவரின் மறைவிற்கு அணைத்து சினிமா பிரபலங்கள் தொடங்கி கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அவரை அனைவரும் தங்கள் வருத்தத்தையும், இறங்கலைகளையும் தெரிவித்துள்ளனர்.


Advertisement