சினிமா

விஜய், சூர்யா லாம் போதும்! இவருதான் வேணும்! அடம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

Summary:

Keerthy suresh would like to act with thala ajith

தற்போதைய தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் மூலம் பிரபலமான இவர் விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் படுவேகமாக வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் பைரவா, சர்கார், சூர்யாவுடன் தான சேர்ந்த கூட்டம், விக்ரமுடன் சாமி 2  என முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்ததால் தற்போது சிறிய ஓய்வில் இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் அவர், தற்போது வரை 20 படங்களின் கதைகளை கேட்டுள்ளேன். விரைவில் புத்துணர்வோடு வேகம் எடுப்பேன் என்றார்.

இந்நிலையில் விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் நடித்திருந்தாலும்  இவருக்கு அடுத்ததாக தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தான் இப்போதைய ஆசையாம்.


Advertisement