சினிமா

விஜய்யுடன் நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ்தான் காரணமா? என்ன சொல்கிறது புள்ளிவிவரம்?

Summary:

Keerthy suresh got nayanthara place

கடந்த ஆண்டு அதிக படம் நடித்த கதாநாயகிகள் என்ற பெருமையை மூன்று நாயகிகள் தக்கவைத்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, வரலக்ஷ்மி. இதில் அதிகப்படங்கள் நடித்து முதல் இதில் இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சர்கார், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2 படங்களில் கதாநாயகியாகவும், சீமராஜா திரைப்படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் நயன்தாரா இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக முதல் இடத்தில் இருந்தார் நயன்தாரா. ஆனால் கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் அந்த இடத்தை தட்டி சென்றுள்ளார். இப்படியே சென்றால் தனது முதல் இடத்திற்கு பிரச்னையாகிவிடும் என்று உணர்ந்த நயன்தாரா தற்போது பெரிய நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் நயன்தாராதான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement