"என்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நன்றி" உருக்கமாக பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்..



Keerthi suresh viral post in twitter

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் முதன் முதலில் 'இது என்ன மாயம்' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

keerthi

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் தொடர்ந்து நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார் மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தையும் நிலைநாட்டி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

இது போன்ற நிலையில், அடிக்கடி சர்ச்சைகளிலும், வதந்திகளிலும் சிக்கிக் கொள்ளும் கீர்த்தி சுரேஷ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 10 ஆண்டுகள் நிறைவாகிவிட்டன. இதற்கு நன்றி கூறி பதிவு வெளியிட்டுள்ளார்.

keerthi

அவர் கூறியதாவது, "திரைத்துறையில் நுழைந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு ரசிகர்களாகிய நீங்கள் தான் காரணம். என்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நன்றி. என்னுடைய வளர்ச்சியில் நீங்களும் ஒரு பாகம்" என்று கூறியிருக்கிறார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.