சூப்பர் ஸ்டாருடன் முதன்முதலாக இணையும் பிரபல இளம்நாயகி! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!keerthi suresh join in thalaivar 168 movie

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவருக்கு என்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்த இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினி அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்கவுள்ளார்.  மேலும் இப்படத்திற்கான நடிகர், நடிகைகளை தேடும் பணியில் படக்குழு மும்முரமாக செயல் பட்டு வருகிறது.

SUN PICTURES

இந்நிலையில்  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கஉள்ளதாகவும், காமெடி நடிகர் சூரி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.இந்நிலையில் தற்பொழுது முதல்முறையாக பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தலைவர் 168 படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.