அம்மாவுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த செயல்... குவியும் பாராட்டுக்கள்!!

அம்மாவுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த செயல்... குவியும் பாராட்டுக்கள்!!


Keerthi Suresh good habits goes viral

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமான இவர்  2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

keerthi Suresh

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் சினிமா துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார். அந்த கொண்டாட்டத்தின் போது கீர்த்தி சுரேஷ் தனது தாய் மேனகா சுரேஷுக்கு காலில் செருப்பு மாட்டிவிடுகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகவே ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

keerthi Suresh

keerthi Suresh