சினிமா

இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்! வெளியான ஷாக் தகவல்!

Summary:

Keerthi suresh acting as super star sister in thalaivar 168

AR முருகதாஸின் தர்பார் படத்தை அடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் தனது 168 வது படத்தில் நடித்துவருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியா? என பல விமர்சனங்கள் எழுந்தது.

அதன்பின்னர், குஷ்பூ, மீனா இருவரும் இந்த படத்தில் ஒப்பந்தமாக கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் தலைவர்-168 படத்தில் சூப்பர் ஸ்டாரின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார் என புது தகவல் வெளியாகியுள்ளது.

இமான் இந்த படத்திற்கு இசை அமைக்க  நடிகர் சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சதீஷ் போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.


Advertisement