சினிமா

கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா படம் எப்போது ரீலிஸ் தெரியுமா?

Summary:

Keerthi suresh

ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் நடிப்பில் வெளியான மகாநடி படத்திற்கு தேசிய விருதை பெற்றார். அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின. 

இந்நிலையில் தற்போது கூட ரஜினியின் 168 படத்தில் நடித்து வருகிறார். மேலும் நரேந்திர நாத் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள மிஸ் இந்தியா படத்தில் பல கெட்டப்களில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்காக அதிக சிரமப்பட்டு தனது தோற்றத்தை மாற்றி மாற்றி நடித்துள்ளாராம். இப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி ரீலிஸ் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement