செம யங்காக, அழகுல மகளையே ஓரம்கட்டிய கீர்த்தி சுரேஷின் அம்மா.! வைரலாகும் 3 தலைமுறை புகைப்படம்!!

செம யங்காக, அழகுல மகளையே ஓரம்கட்டிய கீர்த்தி சுரேஷின் அம்மா.! வைரலாகும் 3 தலைமுறை புகைப்படம்!!



keerthi-suresh-3-generation-family-photo-viral

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே தனது திறமையால் முன்னேறி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் அவரது கைவசம் தற்போது நடிகர் ரஜினியுடன் அண்ணாத்த, மற்றும் செல்வராகவனுடன் சாணிக்காயிதம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி அவர் தெலுங்கில் நான்கு படங்களிலும், மலையாளத்தில் இரு படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

keerthi Suresh

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்திசுரேஷ் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இவ்வாறு இருக்கையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது அம்மா, பாட்டி மற்றும் அக்காவுடன் இருக்கும் 3 தலைமுறை புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இத்திரைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.