நான் அவரை பயங்கரமா சைட் அடிச்சேன்! ரம்மி நடிகை கூறியது எந்த நடிகரை தெரியுமா?

நான் அவரை பயங்கரமா சைட் அடிச்சேன்! ரம்மி நடிகை கூறியது எந்த நடிகரை தெரியுமா?


kayathri-talk-about-famous-actor

தமிழ் சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி. இதனை தொடர்ந்து  காயத்ரி தற்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து சூப்பர் டீலக்ஸ்  படத்தில் நடித்துள்ளார் மேலும் இப்படம் அடுத்த வாரம் வெளிவர உள்ளது.

kayathriஇந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த காயத்ரியிடம் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த காயத்ரி, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் விஜய்சேதுபதியை பார்த்ததும் உங்களைப் பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கிறது என்று அவரிடம் கூறினேன். ஏனெனில் விஜய் சேதுபதி தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும்  மிகவும் சிறப்பாக பயன்படுத்துவார். 

மேலும் அவர் எப்பொழுதும் எனது நடிப்பை புகழ்ந்து பேசுவார். அது  எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவரது நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டும்.                                                                   kayathri

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. விஜய் சேதுபதியை ஆண்தோற்றத்தில் பார்த்த போது கூட அந்த அளவிற்கு சைட் அடிக்க வில்லை. ஆனால் ஷில்பாவை பயங்கரமாக சைட் அடித்திருக்கிறேன் என காயத்ரி கூறியுள்ளார்.