சினிமா

அடேங்கப்பா.. சான்ஸே இல்ல! வேற லெவலில் சும்மா கலக்குறியேமா காயத்ரி! புகைப்படங்களைக் கண்டு மெய்சிலிர்த்த ரசிகர்கள்!!

Summary:

அடேங்கப்பா.. சான்ஸே இல்ல! வேற லெவலில் சும்மா கலக்குறியேமா காயத்ரி! மெய்சிலிர்த்த ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மத்தியிலும் பெருமளவில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோ மாயனின் அமைதியான தங்கையாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அவர் சன் டிவியில் சித்தி2 தொடரில் ஹீரோயின் வெண்பாவின் அண்ணியாக, வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். காயத்ரியின் கணவர் டான்ஸ் மாஸ்டர் யுவராஜ். இருவரும் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தலாக போட்டியிட்டு வருகின்றனர். காயத்ரி சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கக் கூடியவர்.

அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் கடந்த ஒரு வாரமாக நவராத்திரி விழா கொண்டாடுவதை மையமாகக்கொண்டு தெய்வீக கலையுடன் அசத்தலான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் அவர் இன்று நவராத்திரியின் ஏழாவது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சரஸ்வதி கெட்டப் போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


    


Advertisement