அடேங்கப்பா.. வேற லெவல்! என்ன ஒரு தெய்வீக கெட்டப்! அனைவரையும் மெய்மறக்க வைத்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!

அடேங்கப்பா.. வேற லெவல்! என்ன ஒரு தெய்வீக கெட்டப்! அனைவரையும் மெய்மறக்க வைத்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை!


kayathri in lord uma maheshwari getup

பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் பெருமளவில் இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து பல தொடர்களில் நடித்த அவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

அந்த தொடரில் காயத்ரி, ஹீரோ செந்திலுக்கு தங்கச்சியாக மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சன் டிவியில் சித்தி 2 தொடரிலும் வில்லியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் காயத்ரி அவரது கணவருடன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்து அசத்தலாக போட்டியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தற்போது நவராத்திரி தொடங்கிய நிலையில், உமா மகேஸ்வரியாக வேடமிட்டு அவரை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், என்ன ஒரு தெய்வீகமான கெட்டப் என அசந்து போயுள்ளனர். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.