சனம் ஷெட்டி, சுரேஷுக்கு இடையே வெடித்த பெரும் மோதல்! நடிகர் கவின் இவருக்கு ஆதரவாக, என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

சனம் ஷெட்டி, சுரேஷுக்கு இடையே வெடித்த பெரும் மோதல்! நடிகர் கவின் இவருக்கு ஆதரவாக, என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!


kavin-tweet-about-suresh-sanam-shetty-ptoblem

பிக்பாஸ் சீசன் 4ல் கடந்த இரு நாட்களாக, போட்டியாளர்கள் பாதி பேர் அரக்கர்கள், அரக்கிகளை போலவும், மீதி பேர் அரச குடும்பத்தை போலவும் உடையணிந்து கொள்ளவேண்டும். அரக்கர்கள் என்ன செய்தாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலையாக அமர்ந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சுவாரஸ்ய டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்பொழுது கோபத்தின் உச்சிக்கு சென்ற சனம் , சுரேஷை மோசமாக மரியாதையின்றி திட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுரேஷ் தன்னை கன்பெஷன் ரூமிற்கு அழைக்குமாறு பிக்பாஸிடம் கேட்டார்.  

பின்னர் அவரை உள்ளே அழைத்த பிக்பாஸ், சுரேஷ் நீங்க தெரிஞ்சு செஞ்சீங்களா என கேட்க,  சுரேஷ் இல்லை தெரியாமல் செய்ததுதான். அனைவரும் என்னை கார்னர் செய்து மோசமாக பேசுறாங்க என கூறி கதறி கதறி அழுதார். இது அனைவருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சுரேஷ்க்கு ஆதரவு தெரிவிப்பது போல நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான கவின் தனது ட்விட்டர் பக்கத்தில், வலிமை எப்பொழுதும் உங்களிடம் இருக்கட்டும் சக்கரவர்த்தி சார் என கூறியுள்ளார்.