பிக்பாஸ் கவின் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! மனவேதனையுடன் கவின் பதிவிட்ட ட்விட்டர் பதிவு!Kavin fans

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தது மட்டுமின்றி ஆர்மியெல்லாம் உருவாக்கும் அளவுக்கு பிரபலமானார் நடிகர் கவின்.

இவர் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர். அதன் பிறகு பிக்பாஸில் கலந்துகொண்ட கவின் லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டு இன்னும் பிரபலமானார்.

kavin

இந்நிலையில் தற்போது இவரின் ரசிகர் கமல் என்பவர் காலமாகிவிட்டதாக ட்வீட் வந்தது. இதனை பார்த்த கவின் மனவேதனையுடன் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதில் கவின் வாழ்க்கையில் நமக்கான நேரம் எப்போதும் வரும் என்பதை நாம் கணிக்க முடியாது. எனவே எப்போதும் உங்கள் அருகிலிருப்பவர்களையும், அன்புக்குரியவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். கமலின் ஆத்மா சாந்தியடைட்டும் என குறிப்பிட்டுள்ளார்.