சித்தி 2வில் இணைந்த புதிய பிரபலம் இவர்தானா! அப்போ இனி நிறைய சுவரஷ்யங்கள் இருக்கு!!

சித்தி 2வில் இணைந்த புதிய பிரபலம் இவர்தானா! அப்போ இனி நிறைய சுவரஷ்யங்கள் இருக்கு!!


kavin-act-as-double-act-in-siddi-2-movie

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. மேலும் அன்று முதல் இன்று வரை சன் டிவி தொடர்கள் என்றாலே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் சித்தி 2. 

 இதில் ராதிகா, நிழல்கள் ரவி என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் அவர்கள் அண்மையில் சீரியலை விட்டு வெளியேறினர். அதனை தொடர்ந்து அத்தொடரில் தற்போது முன்னணி கதாபாத்திரங்களாக அனைவரையும் கவர்ந்து வருவது கவின் வெண்பா ஜோடிதான்.

Siddi 2

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சித்தி 2 சீரியலில் பெரிய மாற்றம் வரப்போகிறது, புதிதாக ஒரு பிரபலம் இணைகிறார் என்ற செய்திகள் வெளிவந்தன. அவர் வேறு யாருமில்லை. கவின் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வந்தவரே நவீன் என்ற பெயரிலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்த ப்ரமோக்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. மேலும் ரசிகர்களுக்கும் வரும் எபிசோடுகளை குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.