இது எனக்கு அதிர்ஷ்டம் தரும் விதமாக இருந்தது! நெகிழ்ச்சியாக கவின் பதிவிட்ட பதிவு.! குவியும் லட்சக்கணக்கான லைக்குகள்.

இது எனக்கு அதிர்ஷ்டம் தரும் விதமாக இருந்தது! நெகிழ்ச்சியாக கவின் பதிவிட்ட பதிவு.! குவியும் லட்சக்கணக்கான லைக்குகள்.


Kavin

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தது மட்டுமின்றி ஆர்மியெல்லாம் உருவாக்கும் அளவுக்கு பிரபலமானார் நடிகர் கவின்.

இவர் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர். அதன் பிறகு பிக்பாஸில் கலந்துகொண்ட கவின் லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டு இன்னும் பிரபலமானார். 

kavin

இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை சம்மதம் தெரிவிக்காததால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் பேசாமல், பார்க்காமல் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முந்தைய நாள், இந்தப் புகைப்படம் எனது நண்பர்களால் எடுக்கப்பட்டது. இது எனக்கு அதிர்ஷ்டம் தரும் விதமாக இருந்தது. அந்த இரவில் இருந்து சில விஷயங்கள் எப்படி மாறிவிட்டன என்று திரும்பிப் பார்க்கிறேன் என கூறியுள்ளார்.