சினிமா

"சொல்ல வார்த்தையே இல்லை" விஜய்யுடன் நடிப்பது குறித்து கதிர் உற்சாகம்

Summary:

Kathir talks about part of thalapathy 63

தளபதி#63: விஜய்யுடன் நடிப்பது குறித்து கதிர் வெளியிட்ட உற்சாக வார்த்தைகள்

நடிகர் விஜய், அட்லி கூட்டணியில் உருவாக இருக்கும் தளபதி#63 படத்தில் நடிகர் கதிர், விஜயுடன் நடிக்கப்போவதால் உண்டான மதிழ்ச்சியை குறித்து பகிர்ந்துள்ளார். 

மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். பின்னர் விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பல விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் சிகை என்னும் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் அட்லியின் இயக்கத்தில் தளபதி#63 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கதிருக்கு கிடைத்துள்ளது. இதனால் கதிர் மிகுந்த சந்தோசத்தில் உள்ளார். இதனை அவர் கூறியுள்ள வார்த்தைகளே நமக்கு காட்டுகிறது. 

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, "விஜய் அண்ணாவை புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்குள் இருக்கும் சந்தோசத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. படத்தில் என்னுடைய ரோலைப் பற்றி என்னால் சொல்ல முடியாது, ஆனால் மிகவும் சுவாரஸ்யமானது என்று மட்டும் இப்போதைக்கு கூறிக்கொள்கிறேன்" என தெறிவித்துள்ளார். 


Advertisement