சினிமா

விவாகரத்து இல்லை.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தந்தை! ஷாக்கில் ரசிகர்கள்!!

Summary:

விவாகரத்து இல்லை.. தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தந்தை! ஷாக்கில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

மேலும் தனுஷ் வெளியிட்ட அறிக்கையில், 18 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.தற்போது நாங்கள் இருவரும் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தார். மேலும் ஐஸ்வர்யாவும் இதனைப் போன்றே பதிவை வெளியிட்டு பிரியப் போவதை உறுதி செய்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது,  தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள். இது, கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். விவாகரத்து இல்லை. இரண்டு பேருமே தற்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில் உள்ளார்கள். நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன். இருவருக்கும் சில அறிவுரைகளை கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement