சினிமா

ஆத்தி பயமா இருக்கு! சும்மாவே பாக்க முடியல இதுல இது வேறயா! நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.

Summary:

Kasthuri

தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. அதனை தொடர்ந்து கமல், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றும் ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் திருமணத்திற்கு பிறகு சிறிது நாட்கள் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். அதன் பிறகு மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் தற்போது முடிந்த பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்ட கஸ்தூரி சக போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்துடன் மக்களின் ஆதரவையும் பெறாமலும் சில நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் பிஸியாக எப்போதும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடுவது அல்லது ட்வீட் செய்வது என இருந்து வருகிறார்.

அதேபோல் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேயாக மேக்கப்பை போட்டு கொண்டு மிகவும் கொடூரமான போஸை கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை வெச்சு செய்து வருகின்றனர்.

View this post on Instagram

Boo! #halloween #halloweenmakeup

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on


Advertisement