ரொம்ப பெருமையை இருக்கு!! செம கடுப்பில் பிரபல நடிகை வெளியிட்ட பதிவு!! இதுதான் காரணமா?kashuri tweet about ajith vijay fans fight

 1990 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி.  இன்றும் அவர் பெரிதாக பேசப்படுகிறார். காரணம் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடும் சூடான விவாதங்கள் மற்றும் புகைப்படங்கள் தான்.

திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்த கஸ்தூரி தமிழ் படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன் பிறகு சில படங்களில் குறு வேடங்களிலும், ஒரு  பாடல்களுக்கும் நடனமாடி வருகிறார்.

kasthuri

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்  கமல்-சரவணன், தல-தளபதி ரசிகர்கள் புண்யத்துல நேற்று தமிழன்தான் தேசிய அளவுல வைரல். ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்க கண்ணியம், பெண்ணியம், நாகரிகம்" என  பதிவிட்டுள்ளார். 

ஏனெனில் சமூகவலைத்தளங்களில் தல மற்றும் தளபதி ரசிகர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையானது. மேலும் அஜித் ரசிகர்கள்  #RIPactorVIJAY என்ற மோசமான ஹாஸ்டேக்கை பெருமளவில் ட்ரெண்ட் செய்தனர். இது அனைவர்க்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும்  கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட பல பிரபலங்களும் தமிழக இளைஞர்கள் மீது கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் சரவணன் பேருந்தில் செல்லும்போது பெண்களை உரசியதாக கூறியதும் பெரியளவில் சர்ச்சையை கிளப்பி கடும் எதிர்ப்பு வெடித்தது. இந்நிலையில் இந்த இரு சம்பவம் குறித்தே நடிகை கஸ்தூரி அவ்வாறு தெரிவித்துள்ளார்.