நடிகர் கார்த்தி வீட்டில விசேஷம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தார்கள்! வெளியான சூப்பர் தகவல்!

நடிகர் கார்த்தி வீட்டில விசேஷம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தார்கள்! வெளியான சூப்பர் தகவல்!


Karthi wife ranjani got pregnant second time

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி ஆவார். அதனை தொடர்ந்து கார்த்தி பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ்,  தீரன் அதிகாரம் ஒன்று, கைதி எனப் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அவர்  தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

Karthi

நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு உமையாள்  பெண்குழந்தை பிறந்தது. 

 அதனைத்தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்தியின் மனைவி ரஞ்சனி தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமே பெருமகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்தி ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.