சினிமா

ஸ்ரீரெட்டி விவகாரம் - நடிகர் கார்த்தி ஆவேசம்!

Summary:

Karthi Turns His Back on Sri Reddy Controversy

நடிகர்கள் புகார் அளித்தால் ஸ்ரீரெட்டி மீது நடிகர் சங்கம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஊர் ஊராக சென்று திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில புதுக்கோட்டை சென்று ரசிகர்களிடம் பேசிய கார்த்தி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது நடிகர்கள், இயக்குனர்கள் மீது ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார்கள் கூறி வருவதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள் ஸ்ரீரெட்டி புகார் கூறிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். இதனால் அதிர்ந்து போன கார்த்தி, ஸ்ரீரெட்டி கூறும் புகார்களுக்கு எல்லாம் என்ன ஆதாரம்? இருக்கிறது. ஸ்ரீரெட்டி மனம் போன போக்கில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார்களை கூறிக் கொண்டே இருக்கிறார்.

வெறும் புகார்களை கூறினால் மட்டும் போதுமா? ஆதாரங்களை வெளியிட வேண்டும் அல்லவா? உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஸ்ரீரெட்டியால் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் கார்த்தி. அப்படி என்றால் பொய்யான புகார் கொடுக்கும் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நடிகர் சங்க பொருளார் என்ற வகையில் கூறுகிறேன், இதுவரை ஸ்ரீரெட்டி மீது எந்த நடிகரும் புகார் அளிக்கவில்லை. அப்படி புகார் அளிக்கும் பட்சத்தில் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடித்துக் கொண்டார் கார்த்தி. 

அதே சமயம் வரிசையாக தமிழ் நடிகர்கள் பற்றி பேசி வரும் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கார்த்தி துணிச்சலாக பேசியிருந்தாலும், இந்த சர்ச்சையில் அவர் தேவையில்லாமல் தனது பெயரையும் இழுத்துவிட்டுக் கொண்டதாகவே கருதப்படுகிறது.


Advertisement