சினிமா

குக் வித் கோமாளி பிரபலத்தின் தங்கை, இளம் நடிகையை மணந்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அ

தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிரஞ்சனி. இவர் வான்மதி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, விடுகதை உள்ளிட்ட படங்களை இயக்கிய அகத்தியனின் மகள் ஆவார்.   நடிகை நிரஞ்சனியின் மூத்த சகோதரி கனி. அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் அவரது மற்றொரு அக்கா நடிகை விஜயலட்சுமி. அவர் தமிழில் சென்னை 28 என்ற படத்தில் அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவருக்கு இயக்குனர் தேசிங் பெரிய சாமியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று காலை பாண்டிச்சேரியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திருமணத்தில் குடும்பத்தினர், மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும்கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திருமண ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement